சட்டம் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க அல்ல! – சூர்யா காட்டமான ட்வீட்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (14:00 IST)
மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிராக திரைக்கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஏற்கனவே சட்டமாக அமலில் இல்லாமல் வழிகாட்டுதலாக மட்டும் உள்ள ஒளிபரப்பு விதிமுறைகளை சட்டமாக மாற்ற மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த கருத்துகளை தெரிவிக்க இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு திரைக்கலைஞர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல...” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்