கங்குவா படத்தின் ஆடியோ இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகைக்கு விற்பனை.. இத்தனை கோடியா?

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (08:03 IST)
சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சித்துணுக்கு இணையத்தில் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் ஆடியோவை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை சூர்யா படத்துக்கு இல்லாத தொகையாக 20 கோடி ரூபாய்க்கு ஆடியோ விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்