‘கொலை’ இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (07:52 IST)
இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த படம் கடந்த ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குனர் பாலாஜி குமார் இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர்.  இந்நிலையில் கொலை படத்துக்குப் பிறகு பாலாஜி குமார் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கதையை அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் சேதுபதிக்காக பாலாஜி குமார் எழுதியதாகவும், ஆனால் அப்போது அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை என்பதால் இப்போது ஆர்யாவை வைத்து மீண்டும் தொடங்குவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்