ஆஸ்கர் வென்றவருடன் கைகோர்க்கும் சூர்யா

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (12:04 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கேவி ஆனந்த் இயக்கத்தில்  காப்பான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரசியல் படமான என்ஜிகே படத்தில் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
காப்பான் படத்தில் சூர்யா என்எஸ்ஜி காமாண்டராக நடித்துள்ளார். இதில் மோகன்லால், ஆர்யா , சாய்ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
 
இதையடுத்து சூர்யாவின் 38வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க உள்ளார். ஆஸ்கர் விருது வென்ற பிரீயட்ஸ் : எண்ட் ஆப் சண்டன்ஸ்  படத்தை தயாரித்த குனீத் மோங்கா சூர்யாவின் 38வது படத்தில் இணைய உள்ளார்.  இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்க உள்ளது. முழு தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்