காப்பான்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்! சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (20:20 IST)
சூர்யா, ஆர்யா, சாயிஷா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ’காப்பான்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தெரிந்தது. இந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மீண்டும் அவர் மேல்முறையீடு செய்திருப்பது ‘காப்பா’ படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
 
சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படத்தின் கதையை தன்னுடைய கதை என்று எழுத்தாளர் ஜான் சார்லஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ’சரவெடி’ என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை கேவி ஆனந்த் அவர்களிடம் தெரிவித்து இருந்ததாகவும், அந்தக் கதையைத்தான் அவர் ’காப்பான்’ என்ற பெயரில் படம் எடுத்ததாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்
 
 
ஆனால் இந்த வழக்கில் பதில் அளித்த கேவி ஆனந்த் இந்த மனுவை தாக்கல் செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறியதை அடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜாண் சார்லஸ் தற்போது மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் 
 
 
இந்த மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. நாளைய விசாரணைக்கு பின்னரே ’காப்பான்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகுமா? இல்லையா என்பதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்