சூர்யா- சிவா படத்தில் இணைந்த மலையாள தொழில்நுட்பக் கலைஞர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (08:43 IST)
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

சென்னையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பூஜை நடந்தது. இதையடுத்து இன்று படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பாகுபலி, KGF படங்களைப் போல இந்த படமும் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாம். அதில் கணிசமான காட்சிகள் 1980 களில் நடப்பது போல கதைக்களத்தை உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. அந்த வீடியோவில் ஆரம்பத்தில் ஒரு கழுகு பறக்கிறது. பின்னர் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என்ற பெயர்கள் காட்டப்படுகிறது. பின்னர் பெரும் போர்களத்தை தாண்டி சென்று கையில் கோடாரி, வில் அம்புகளுடன் இருக்கும் நபரின் மேல் அமர்கிறது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டரில் படத்தின் படத்தொகுப்பாளர் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் தள்ளுமாலா படத்தின் எடிட்டர்,  நிஷாத் யூசுப் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் பணிபுரிந்த பல படங்களில் படத்தொகுப்பு குறித்து சிலாகித்து பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்