செட் ரெடியா இருக்கு… ஆனாலும் ஒரு மாதமா ஷூட் போகாத விஷால்… தயாரிப்பாளருக்கு 3 கோடி நஷ்டம்!

புதன், 7 செப்டம்பர் 2022 (14:47 IST)
விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளன.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி  படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கடந்த மே மாதம் படத்தின் பூஜை நடந்தது. இதில் படத்தின் நாயகன் விஷால், மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதுவரை 40 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு, ஷூட்டிங் நடத்த படக்குழு தயாராக உள்ள நிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக விஷால் ஷூட் செல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு விஷாலின் உடல் நலப் பிரச்சனைகள் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் வினோத்துக்கு 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்