வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது? சூர்யா கொடுத்த அப்டேட்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (08:00 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக சொல்லப்பட்டு வரும் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியின் வாடிவாசல் திரைப்படம் பற்றிய அப்டேட்டை சூர்யா இப்போது கொடுத்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசும்போது “விடுதலை 2 ஷூட்டிங் முடிந்ததும் வாடிவாசல் திரைப்படம் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்