சூர்யாவின் கங்குவா படம் பற்றி வெளியான சர்ப்ரைஸ் தகவல்!

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:28 IST)
சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சித்துணுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. கங்குவா திரைப்படம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரண்டு காலங்களில் நடக்கும் விதமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்