100 ஏழை, எளிய குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்கு சன்பிக்சர்ஸ் நிதியுதவி

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (20:49 IST)
அப்பொலோ மருத்துவமனைக்கு, சன்பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி மாறன், 100  ஏழை, எளிய குழந்தைகளின்  இதய அறுவைச் சிகிச்சைக்காக  ரூ.1 கோடிக்கான காசோலையை இன்று வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ். இந்த நிறுவனம், எந்திரன், சுறா, பேட்ட, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களைத் தொடர்ந்து,ரஜினிகாந்த் நடிப்பில், ஜெயிலர் படத்தை தயாரித்திருந்தது.

‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை படக்குழு கொண்டாடி வரும் நிலையில், ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு  செக் வழங்கி வாழ்த்திய துடன், தனித்தனியே அவர்களுக்கு சொகுசு கார் வழங்கினார் கலாநிதி மாறன்.

இந்த  நிலையில் ,ஜெயிலர் பட வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சன்பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி மாறன், 100  ஏழை, எளிய குழந்தைகளின்  இதய அறுவைச் சிகிச்சைக்காக  ரூ.1 கோடிக்கான காசோலையை இன்று அப்பொலோ மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்