#Jailer- நெல்சனுக்கு புதிய சொகுசு கார் வழங்கிய கலாநிதி மாறன்

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (19:10 IST)
ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு புதிய சொகுசு கார்  வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் கலாநிதி மாறன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில்  கடந்த  மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் விமர்சன அளவில் வசூல்  ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, உலகளவில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.
 

இந்த நிலையில்,  நெல்சன் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், ஜெயிலர் பட  ஆரம்ப கட்டத்தின்போது, நெல்சன் இப்படத்தை இயக்குவாரா என்று கேள்வி எழுந்தது, ஆனால் இப்படத்தை அவர் பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கியுள்ளார் என்று பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதால், சன்பிக்சர்ஸ் அதிபர் கலாநிதிமாறன், நடிகர் ரஜினிகாந்திற்கு  செக் வழங்கியதுடன், சர்ப்பிரைஸாக BMW X7 என்ற சொகுசு காரை வழங்கினார்.

அதேபோல் இன்று  ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு காசோலை வழங்கி வாழ்த்து தெரிவித்த கலாநிதி மாறன் இன்று தன் அலுவலகத்தில் வைத்து இயக்குனர் நெல்சனுக்கு போர்ச்சே என்ற பிரபல சொகுசு காரை சர்ப்பிரைஸாக வழங்கியுள்ளார். 

இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில் ஜெயிலர் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

To celebrate the grand success of #Jailer, Mr.Kalanithi Maran presented the key of a brand new Porsche car to @Nelsondilpkumar #JailerSuccessCelebrations pic.twitter.com/kHTzEtnChr

— Sun Pictures (@sunpictures) September 1, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்