சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் தொடங்குவது எப்போது?

vinoth
புதன், 26 பிப்ரவரி 2025 (16:49 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. பின்னர் அந்த படத்தின் இயக்குனராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 6 ஆம் தேதி சென்னையில் இந்த படத்துக்கான பூஜை நடக்கவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து ப்ரோமோ ஷூட் நடக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பூஜைக்காக பிரம்மாண்டமான அம்மன் சிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பூஜையில் பல ஆன்மீகவாதிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்