கவின் நடித்து வரும் "மாஸ்க்" என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சற்றுமுன், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
கவின் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் "மாஸ்க்" படத்தை, அசோக் என்பவர் இயக்கி வருகிறார். கவினின் ஜோடியாக, இந்த படத்தில் ருஹானி ஷர்மா நடித்து வருகிறார். இவர், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில், வில்லி கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும், அவரது கேரக்டர் தான் படத்தின் திருப்புமுனை என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் டீசர், டிரைலர் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும், கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.