முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்? அண்ணாமலை கேள்வி..!

Siva

புதன், 26 பிப்ரவரி 2025 (15:11 IST)
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று முதலமைச்சருக்கு தகவல் கொடுத்தது யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தொகுதி மறு சீரமைப்பு  எப்படி நடக்கும்?" என்பதை அமைச்சர் அமித்ஷா தெளிவாக விளக்கியுள்ளதாக கூறினார். விகிதாசார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், தொகுதிகள் குறையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை ஏன் கூட்டினார்? ஏற்கனவே பிரதமர் இது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். எனவே, "தமிழக முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
 
அதே நேரத்தில், மத்திய மாநில அரசுகள் மீது விஜய் குறை கூறியுள்ளதாகவும், அவர் நடத்தும் பள்ளியில் மும்மொழி கொள்கை செயல்படுத்தப்படும் நிலையில், அவரது கட்சித் தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழி போதுமா? என்ற கேள்வியையும் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்