பிரபல தொலைக்காட்சியில் 19 போட்டியாளர்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக 100 நாள் முடிந்துவிட்டது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் நன்கு அறியப்பட்டதோடு, தற்போது எல்லோரும் படங்கள், விளம்பரங்கள் என பிஸியாகிவிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே வீட்டை விட்டு போகின்றேன் என கூறிய நடிகர் வையாபுரி கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியை வென்றுவிடுவாரோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த இவர் தன் வாழ்க்கையில் பல விஷயங்களை தற்போது உணர்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் வாழ்நாளில் இப்படியொரு புகழையும், ரசிகர்களின் ஆதரவையும் கண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இவர் சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தில் முக்கியமான ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று இவர் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.