ஓவியா இல்லாத படமா? – வெறுப்பில் ஓவியா ஆர்மி

திங்கள், 25 செப்டம்பர் 2017 (17:30 IST)
‘கலகலப்பு 2’ படத்தில் ஓவியா இல்லாததால், ஓவியா ஆர்மியினர் வெறுப்பில் உள்ளனர்.


 

 
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள படம் ‘கலகலப்பு 2’. ஏற்கெனவே வெளியான ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாக உள்ளது. முதல் பாகத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். எனவே, இரண்டாம் பாகம் பற்றிய செய்தி கிடைத்தபோது, ஓவியா நிச்சயம் இந்தப் படத்தில் நடிப்பார் என மகிழ்ச்சி அடைந்தனர் ஓவியா ஆர்மியைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஜெய், ஜீவா, கேத்ரின் தெரேசா, நிக்கி கல்ரானி ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது.

தங்கள் தலைவி ஓவியா இல்லாததால், செய்தியைக் கேட்டதும் ஓவியா ஆர்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘நாங்கள் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டோம்’ என சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்தப் படத்தில், ‘மிர்ச்சி’ சிவா முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்