சுதா கொங்கராவுக்கு அழைப்பு விடுத்த அஜித்! இருவரும் இணைகிறார்களா?

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (20:03 IST)
பிரபல இயக்குனர் சுதா கொங்கரா தற்போது சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ என்ற படத்தை சுதா கொங்கரா இயக்குவார் என்று கூறப்பட்டது. விஜய்க்கு கதை கூறி கிட்டத்தட்ட இந்த படம் இறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென சுதா கொங்கரா இந்த படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது தளபதி 65’ படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவார் என்று தெரிகிறது 
 
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக அஜித் தரப்பில் இருந்து சுதா கொங்காராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டததாகவும், விரைவில் அஜித்தை சந்திக்க சுதா கொங்காரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. விஜய்க்காக தயார் செய்து வைத்திருந்த கதையை சுதாகொங்காரா, அஜித்துக்கு சொல்வார் என்றும் அஜித்துக்கு அந்த கதை பிடித்து இருந்தால் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுவதால் விரைவில் அஜீத் மற்றும் சுதா கொங்கரா இணையும் படம் குறித்த அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது. அனேகமாக அஜித் நடித்து வரும் ’வலிமை; படத்தை அடுத்து அஜீத் நடிக்க உள்ள அடுத்த படத்தை சுதாகொங்காரா இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்