டீ சொல்லுங்க ராஜேந்திரன்… தெறி விஜய் பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காவலர் !

வெள்ளி, 20 மார்ச் 2020 (14:58 IST)
நிர்பயா கொலை குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து பலரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வரும் நிலையில் காவலர் ஒருவர் வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட முகேஷ்குமார், அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு இன்று பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது சம்மந்தமாக பலரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் ‘கடைசியாக .. டீ சொல்லுங்க ராஜேந்திரன்.’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வசனம் தெறி படத்தில் இதுபோன்ற குற்றவாளி ஒருவரைக் கொன்ற பிறகு விஜய் சொல்லும் புகழ்பெற்ற வசனமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்