விஷால் எவ்வளவு பெரிய ஃப்ராடு என்று ஊருக்கே தெரியும்: நடிகை ஸ்ரீரெட்டி

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:46 IST)
நடிகர் விஷால் எவ்வளவு பெரிய பிராடு என்பது உலகத்துக்கே தெரியும் என்று ஸ்ரீ ரெட்டி பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஷால் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த போது ஸ்ரீரெட்டி யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவர் செய்த சேட்டை மட்டும் எனக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.
 
விஷாலின் இந்த கருத்துக்கு பதிலடி கூறிய ஸ்ரீரெட்டி ஒரு பெண்ணை பற்றி பேசும்போது நாவடக்கம் தேவை, ஊடகத்தின் முன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும், விஷால் யார் என்பதை அனைவரும் அறிவார்கள், அவர் எவ்வளவு பெரிய பிராடு என்பது உலகத்துக்கே தெரியும்.

ஊடகத்தின் முன் பேசி விட்டால் அவர் மரியாதைக்குரிய நபர் என்று மாறிவிட மாட்டார், உங்கள் வாழ்க்கையில் எத்தனை பெண்கள் வந்து விட்டு சென்றார்கள், அதற்கு காரணம் என்ன? உங்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்கவில்லை, அதற்கு காரணம் என்ன?

என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன, அதில் ஒன்று வேண்டுமானால் உங்களுக்கு தருகிறேன்’ என்று கூறியுள்ளார். ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்