ஆனாலும் அந்த படம் வெற்றி பெறவில்லை. ஆனால் அதன் பிறகு ஓடிடியில் ரிலீஸான போது ஹாட்ஸ்பாட் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைக் குவித்தது. படத்தில் சொல்லப்பட்ட நான்கு கதைகளிலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொடுத்திருந்தார் இயக்குனர். ஆனால் அந்த அதிர்ச்சி மதிப்பீடுகளைத் தாண்டி கதை உள்ளீடற்றதாகவும், பிரச்சாரத் தனம் கொண்ட உருவாக்கமாகவும் இருந்தது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்க, இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது சம்மந்தமான ப்ரமோஷன் ஒன்றை படக்குழு வெளியிட அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.