ஸ்ரீதேவி மரணம்; கணவர் போனி கபூர் சார்பில் அறிக்கை வெளியிட்ட யாஷ்ராஜ் பிலிம்ஸ்

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (15:06 IST)
துபாயில் நேற்று முன் தினம் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தார். திடீரென நடந்துள்ள இந்த செய்தியால் சக  நடிகர், நடிகைகள், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், அவர் குடும்பத்தார் உருக்காமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்திய நேரப்படி மதியத்துக்கு மேல் மும்பைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பின்னர் அவரது உடல்  பொதுமக்கலின் பார்வைக்காக சில மணி நேரங்கள் வைக்கப்பட உள்ளது.
 
இதனிடையே ஸ்ரீதேவியின் மறைவு குறித்து அவரது கணவர் போனி கபூர் சார்பில் யாஷ்ராஜ் பில்ம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர்கள். அதில் போனி  கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர், அய்யப்பன் ஆகியோர் ஸ்ரீதேவி கபூரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் உடல் இந்தியாவுக்கு வர உள்ள  நிலையில் அது பற்றிய விவரங்களை கிடைக்கப் பெறும்போது தெரிவிக்கிறோம். தயவு செய்து யாரும் இது தொடர்பாக குடும்பத்தினருக்கு போன் செய்து கேட்க  வேண்டாம் என கேட்டு கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்