அந்த வகையில் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்கள் இணைந்து நடித்தவரும், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர்களில் ஒருவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மறைவு குறித்து கூறியதாவது: 'மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியுடன் கமல்ஹாசன், 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், தாயில்லாமல் நானில்லை, குரு, வறுமையின் நிறம் சிகப்பு, சங்கர்லால், மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.