சினிமாவில் ஜெயிப்பது முக்கியம்… ஆனா நிலைப்பது…?- புகழ் படத்தின் பரஸ் மீட்டில் சூரி பேச்சு!

vinoth
வியாழன், 8 பிப்ரவரி 2024 (14:01 IST)
விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர். அதையடுத்து பிலிப்பைன்ஸில் படப்பிடிப்பு நடந்தது.

படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் புகழ்-காக சூரி கலந்து கொண்டார். அதில் பேசிய சூரி “சினிமாவில் வெற்றி பெற்ற பலரும் கஷ்டப்பட்டுதான் வந்திருக்கிறார்கள். அதைப் போல நானும் கஷ்டப்பட்டுதான் வந்திருக்கிறேன். சினிமாவில் ஜெயிப்பது முக்கியம். ஆனால் நிலைப்பது அதை விட முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்