தாணு தயாரிப்பில் ராகவா லாரன்ஸை இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!

vinoth

வியாழன், 8 பிப்ரவரி 2024 (13:55 IST)
ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ஷோ ரன்னராக கேங்ஸ் என்ற வெப் சீரிஸை தயாரித்து மேற்பார்வையிடுகிறார். இந்த தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இதண் பூஜை கடந்த மாதம் நடந்த நிலையில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்நிலையில் இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் அல்லது ஜி வி பிரகாஷ் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்