விடுதலை படத்தின் வசூலை மூன்றே நாளில் கடந்ததா சூரியின் கருடன்?

vinoth
செவ்வாய், 4 ஜூன் 2024 (07:43 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இதற்கிடையில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் என்ற திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் சூரி தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் விடுதலை முதல் பாகத்தின் வசூலை கருடன் திரைப்படம் மூன்றே நாட்களில் கடந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையாக இருக்காது என்றாலும் விடுதலை படத்தின் வசூலை கருடன் எப்படியும் முந்திவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்