இந்தியில் தயாராகிறது ’’சூரரைப் போற்று’’ திரைப்படம் …

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (17:03 IST)
இந்தியாவில் குறைந்த பட்ஜெட் விமானப் பயணத்திற்கு வித்திட்ட  கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, சூரரைப் போற்று திரைப்படம் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ளது. எனவே இப்படம் அடுத்தாண்டு ஹிந்தியில் தயாராக உள்ளதாக கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சூரரைப்  போற்று என்ற படம் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திற்கு  தடையில்லாச் சான்று கிடைத்தது. இதையடுத்து, டிரைலர் வெளியானது.

மிகப்பெரிய எமோஷனல் பிலிமாம இருப்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் நவம்பர் 12 அம் தேதி அமேசான் பிரைம் ஒடிடியில் ரிலீசாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், கேப்டன் கோபிநாத் தன் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதிய simply fly என்ற நூலினை பாலிவுட் தயாரிப்பாளர் சூனித் மோங்கா படித்திருப்பதாகவும்,  அதை இந்தியில் திரைப்படமாக எடுக்க அவர்  விரும்புவதாகவும்  கேப்டன் கோபிநாத் கூறியுள்ளார்.

மேலும், இந்தியில்  சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தாண்டு  உருவாகவுள்ளது எனவும் கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்