சனிக்கிழமை மட்டும் கோபப்படும் ஹீரோ… ‘சூர்யவின் சனிக்கிழமை’ படம் பற்றி பேசிய எஸ் ஜே சூர்யா!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:23 IST)
நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படம் சூர்யாவின் சனிக்கிழமை என்ற பெயரில் தமிழில் டப் ஆகி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ் ஜே சூர்யா “ஒருவன் பயங்கர கோபக்காரனாக இருக்கிறான். அவன் அம்மா, அவனிடம் கோபப்படக் கூடாது என சொல்ல, அவன் சனிக்கிழமை மட்டும் கோபப்பட்டுக் கொள்கிறேன் என அனுமதி வாங்குகிறான். இவனுக்கு நேர் எதிராக கோபக்காரன் ஒருவனோடு ஒரு புள்ளியில் அவன் மோதினால் என்ன ஆகும் என்பதுதான் இந்த கதை. ஆக்‌ஷன் படங்களுக்கு அடிப்படை மாணிக்கம் பாட்ஷாதான். அதை இந்த படத்தில் புதுமையாக சொல்லியுள்ளார் இயக்குனர்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்