டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக டிமாண்டி காலனி 2 படத்தை இயக்கியுள்ளார்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீஸான இந்த படம் எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் தங்கலான் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்ததால் டிமாண்டி காலணி பக்கம் ரசிகர்கள் சாய ஆரம்பித்தனர். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்யும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பார்ட் 3 எப்போது வரும் என்பது குறித்து பேசியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதில் வேறொரு படத்தை எடுத்துவிட்டு அதன்பின்னர் டிமாண்டி காலணி 3 படத்தைத் தொடங்குவேன். அந்த படம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும்.