சிவகார்த்திகேயனின் 22 ஆவது படத்தை இயக்கும் இயக்குனர் இவர்தான்!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (06:56 IST)
சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 ஆவது படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். காஷ்மீரில் இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தையும் அயலான் இயக்குனர் ரவிக்குமார்தான் இயக்குகிறார் எனக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்