சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக 21ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதாவது நாளை பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
எனவே இந்த படத்தின் தற்போதையை நீளம் இரண்டு மணி நேரம் 11 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. 131 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் மிகவும் சிறிய படமாக இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது
இருப்பினும் இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யும் அளவுக்கு கண்டெண்ட் இருப்பதாக படத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்