வேற்றுகிரக மனிதர்களுடன் மோத தயாராகும் சிவகார்த்திகேயன்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (13:36 IST)
தமிழ்த்திரையுலகில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை குறுகிய காலத்தில் பிடித்துவிட்ட இளம் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது லீக் ஆகியுள்ளது. ஹாலிவுட் பட பாணியில் வேற்றுகிரக மனிதர்கள் பூமியை அழிக்க வருவதாகவும், அதை விஞ்ஞானி கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன் தடுக்க போராடுவதுதான் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை வெளிநாட்டில் அமைக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி இந்திய திரையுலகியே ஒரு புதிய முயற்சி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்