விவேகம் தமிழ் படமே இல்லை; கதையை வெளியிட்ட சிவா

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (21:27 IST)
இயக்குநர் சிவா முதல்முறையாக அஜித் நடிக்கும் விவேகம் படம் பற்றி தெரிவித்துள்ளார்


 

 
அஜித் படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் விவேகம். அண்மையில் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலோடு உள்ளனர். இயக்குநர் சிவா விவேகம் படத்தை ரகசியமாக வைத்துள்ளார். படத்தின் ஸ்டில்ஸ் மட்டும் அவ்வப்போது வெளியானது. தற்போது சிவா முதல்முறையாக படத்தின் கதை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:- 
 
விவேகம் தமிழ் படமே இல்லை. அது ஒரு இண்டர்நேஷ்னல் படம். அக்ஷரா ஹாஸனை சுற்றிதான் கதை நகரும். விவேகம் படத்தை ஒரு சர்வதேசப் படமாகத்தான் பார்க்க வேண்டும்.
 
அஜித் இதில் சர்வதேச புலனாய்வு ஏஜென்டாக நடிக்கிறார். விவேக் ஓபராய் வெறும் வில்லனாக மட்டுமல்லாமல், பவர்ஃபுல் பாத்திரமாக நடித்துள்ளார். நாயகி காஜல் அகர்வால் என்ஆர்ஐ பெண்ணாக வருகிறார். 
 
முழுக்க ஐரோப்பிய நாடுகளான செர்பியா, பல்கேரியா, குரேஷியா, ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. விவேகம் படத்தின் ஒவ்வொரு மணித் துளியும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்.
 
அடுத்த கட்டுரையில்