தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகை

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (19:17 IST)
மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அறிமுகமாகிறார்.



 
மலையாள நடிகை மஞ்சு வாரியர், தமிழில் அறிமுகமாக இருக்கிறார். ரமணா இயக்கும் படத்தில், அரவிந்த் சாமியுடன் நடிக்கிறார் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ படங்களின் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. ‘குற்றம் 23’ வெற்றிக்குப் பிறகு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் த்ரில்லர் கதை ஒன்றை அறிவழகன் தயார் செய்துள்ளார். மஞ்சு வாரியரிடம் கதையைச் சொன்னபோது, அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதால் விரைவில் படத்தில் நடிக்க கையொப்பமிடலாம் எனத் தெரிகிறது. இப்படம் தமிழ் - மலையாளம் என இருமொழி படமாக உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்