அஜித்துடன் ஐந்தாவது முறையாகக் கூட்டணி… சிறுத்தை சிவா கொடுத்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (14:54 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் சிறுத்தை சிவா அடுத்து இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்த போது அஜித் சொன்ன சம்பளம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒத்துவரவில்லையாம். அதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்துப் பேசியுள்ள சிறுத்தை சிவா “அஜித் சாருடன் நான் ஐந்தாவது முறையாக ஒரு படத்துக்காக இணையவுள்ளேன். ஆனால் அந்த படம் பற்றி நான் அறிவிக்காமல், அஜித் சாரே அறிவித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்