அனிருத் பிறந்தநாளில் ரிலீஸாகும் LIK முதல் சிங்கிள் பாடல்!

vinoth
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (14:48 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. ஆனால் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சண்டிகாரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்துக்கு LIK (Life insurance company) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் படத்தில் முதல் சிங்கிள் பாடலான ‘தீமா’ பாடல் நாளை அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்