இசையமைப்பாளராக அவதாரமெடுக்கும் பின்னணிப் பாடகர்

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (10:32 IST)
பின்னணிப் பாடகரான கிரிஷ், இசையமைப்பாளராக அவதாரமெடுக்க இருக்கிறார். பின்னணிப் பாடகர், நடிகர் என இரண்டு முகங்களுக்கு சொந்தக்காரர் கிரிஷ். 
 
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ பாடலைப் பாடி பாடகரான அறிமுகமான கிரிஷ், அதன்பிறகு பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான் என ஏகப்பட்ட இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றி இருக்கிறார்.
 
பாடுவதோடு நடிப்பிலும் ஆர்வம் கொண்ட கிரிஷ், சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த வருடம் இசையமைப்பாளராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கிரிஷ். சில படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இவர், நடிகை சங்கீதாவின் கணவராவார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்