‘மாரி’ படத்தின் வெற்றிக்கு, அனிருத்தின் இசையும் மிக முக்கிய காரணம். ஆனால், தற்போது தனுஷும், அனிருத்தும் பேசிக் கொள்வதில்லை. எனவேதான் ‘விஐபி 2’ படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார். ஆனால், அது ‘விஐபி’ முதல் பாகம் அளவுக்கு இல்லை. எனவே, ‘மாரி 2’ படத்துக்கு யார் இசையமைப்பது என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ‘மாரி 2’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இருவரும் இணைகின்றனர்.