திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிம்பு.

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (11:58 IST)
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிம்பு.
நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக கேரளாவில் உடற்பயிற்சி செய்தும் ஸ்லிம்மாகி திரும்பி வந்திருக்கும் நிலையில் அவர் தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் ’ஈஸ்வரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்னர் திருப்பதி கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று சிம்பு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
’ஈஸ்வரன்’ படத்தை அடுத்து ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்