சிம்பு படத்திற்கு தொடர் பிரச்சனை: உஷா ராஜேந்தரின் ஆவேசமான வீடியோ

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (21:55 IST)
சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் இதுகுறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது 
 
சிம்பு என்பவர் நடிகர் சங்கத்தில் உள்ள ஒரு உறுப்பினர், அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கும் சிம்புவுக்கும் இடையே பிரச்சனை நடக்கும் போது அது குறித்த பேச்சுவார்த்தை நடக்கும் போது அதில் பெப்சி யூனியன் தலைவர் ஆர்கே செல்வமணி வர வேண்டிய அவசியம் என்ன என்று உஷா ராஜேந்தர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்
 
ஆர்கே செல்வமணியின் பெப்ஸி உள்ள 24 சங்கங்களில் நடிகர் சங்கம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கம் கிடையாது அப்படி இருக்கும்போது அவர் அழைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
சிம்பு படத்திற்கு தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி செய்து வருவதற்கு அவர் கண்டனம் தெரிவித்த அவர் பேசி இந்த வீடியோ வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்