மீண்டும் பத்துதல ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு..

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (16:42 IST)
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்துதல பட ஷூட்டிங்கில் மீண்டும் சிம்பு இணைந்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில் , சிம்பு – கௌதம் கார்த்திக் , ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பத்துதல. இப்படம், 2019 ஆம் ஆண்டு கன்னட இயக்குனர் நார்தன் இயக்கத்தில் வெளியான  முப்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இப்படம் வளர்ந்து வந்த   நிலையி, டி.ராஜேந்தருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டதால்,நடிகர் சிம்பு அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் சென்றார்.

தற்போது சிகிச்சை முடிந்து டி.ராஜேந்தர் பழைய  உற்சாகத்துடன் திரும்பி விட்டார்.
இந்த நிலையில்,  பத்து தல படத்தில் ஷுட்டிங்க் நாளை முதல்  கர்நாடகாவில் நடக்க வுள்ளது.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்