ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் முத்தின கத்திரிக்கா படத்தின் இயக்குனர் வெங்கட் இயக்கும் கடமையை செய் படத்தில் நடித்துள்ளார். அவருடன் இந்த படத்தில் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.