கொரோனா குமார் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸைத் தர தேவையில்லை… சிம்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (07:09 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ரூபாய் 4.50 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.  ஆனால் முன்பணம் பெற்றுக்கொண்டும் அந்த படத்தில் நடித்துக் கொடுக்காமல் சிம்பு வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சிம்பு ரூபாய் ஒரு கோடி உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த வழக்கு விசாரணையின் அடுத்த கட்டத்தில் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு வருடத்துக்குள் படம் தொடங்காவிட்டால், முன்பணத்தைக் கொடுக்கத் தேவையில்லை” என வாதாடியுள்ளார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அவகாசம் அளித்துள்ளது. மேலும் சிம்பு ஒரு கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளிப்பது சம்மந்தமாக அன்றைய நாளில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்