'' நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்''- நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (14:05 IST)
நடிகர் விஷால் வரும் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவவம் லைகா. இந்த  நிறுவனத்திற்கு விஷால்  தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை  நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் சமீபத்தில், அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தனர். இதில் விஷாலின் வங்கி கணக்கு விவரங்களை சமர்பிக்க கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் “மார்க் ஆண்டனி” படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.

ஆனால் வங்கி கணக்கு விவரங்கள் முரணாக இருந்தால் எதிர்காலத்தில் படம் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் விஷாலை எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஷால் வரும் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் விஷால் ஆஜராக வேண்டும் எனவும், ரூ. 15 கோடி செலுத்த  நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என  தனி நீதிபதி, விஷாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்