14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் சிம்பு & த்ரிஷா!

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (09:45 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இப்போது டெல்லி செங்கோட்டை பகுதியில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷாதான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தம் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்