இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் உருவான இடம்பொருள் ஏவல் திரைப்படம் உத்தமவில்லன் படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய அது என்றும் ஆனால் உத்தம வில்லன் முதலில் ரிலீஸ் ஆகி லிங்குசாமிக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதால் இடம் பொருள் ஏவல் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சென்று விட்டது என்றும் இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: திரு லிங்குசாமி அவர்கள் தயாரித்த இடம் பொருள் ஏவல் படம் அவர் தயாரித்த உத்தம வில்லன் படத்திற்கு முந்தி வந்திருக்க வேண்டிய படம், ஆனால் உத்தம வில்லன் முந்திவிட்டது. என் படம் நின்று விட்டது.