கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.
மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது.
இந்தியன் 2 படம் சம்மந்தமாக எழுந்த ட்ரோல்களில் அதிகமாக சிக்கியது இயக்குனர் ஷங்கரும், நடிகர் சித்தார்த்தும்தான். சித்தார்த் நடித்திருந்த சித்ரா அரவிந்தன் கதாபாத்திரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ள சித்தார்த் “இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக என் வீட்டில் என்னைப் பாராட்டினார்கள்” எனக் கூறியுள்ளார். சித்தார்த்தின் இந்த கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.