சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன், தனுஷ், நயன்தாரா உள்பட பலரும் வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில், இன்று ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு "கூலி" படத்தின் அப்டேட் மற்றும் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் "கூலி" படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் இன்று ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி மாலை 6 மணிக்கு சிறப்பு விருந்து காத்திருக்கிறது என்று அறிவித்துள்ளது. இது குறித்த நான்கு நொடி வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனேகமாக "கூலி" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தற்போது "கூலி" படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற்று வருவதாகவும், இதில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.