லாபம் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் ஸ்ருதி ஹாசன்… ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (16:45 IST)
விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்புக்கு ஸ்ருதிஹாசன் வர மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர். அப்போது தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்து அவர்களை தொட்டும் கட்டிப்பிடித்தும் பேசியும் உள்ளார் விஜய் சேதுபதி. ஆனால் இதையெல்லாம் பார்த்து பாதுகாப்பு இல்லாமல் விஜய் சேதுபதி இப்படி நடந்துகொள்வதால் தனக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி மேல் இன்னமும் கோபத்தில் இருக்கிறாராம் ஸ்ருதி.

இந்நிலையில் இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள வேண்டுமாம். ஆனால் அதற்கு தான் வரமாட்டேன் எனக் கூறி பிடிவாதம் பிடிப்பதாகவும், இயக்குனர் ஜனநாதன் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்