இந்தியில கால் வெச்சதும் டாப் ஹீரோயினோடு ஜோடி! – விஜய்சேதுபதி பட அப்டேட்!

திங்கள், 11 ஜனவரி 2021 (14:37 IST)
நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இந்திபடத்தில் நடிக்க உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழில் பிரபலமாக நடித்து வரும் விஜய் சேதுபதி முதன்முதலாக இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் இந்தியில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ’மும்பைகார்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதன் மூலம் விஜய் சேதுபதி இந்தி சினிமாவில் முதன்முறையாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த பட பணிகள் தொடங்கும் முன்னரே இரண்டாவதாக ஒரு இந்தி படத்தில் நடிக்கவும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு கேத்ரீனா கைஃப் ஜோடியாக நடிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஏஜெண்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்