ஐயோ... செம அழகு செல்லம் - ஷெரின் ஹோலி கொண்டாட்ட வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (13:30 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினிக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. ஆம், பிக்பாஸில் இருந்ததைவிட தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக வலம் வருகிறார். இந்நிலையில் மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடிய அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் அழகில் மூழ்கி அனைவரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்